Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

March 23, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கிராம உள்ளாட்சித் தேர்தலையும் சேர்த்து நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் சிவகுமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களின் கிராம உள்ளாட்சிக்கான பதவிக்காலம் 2025 ஜனவரியுடன் முடிவடைந்தது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான பதவிக்காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் தங்கள் குறைகளையும் தேவைகளையும் அதிகாரிகளிடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி !

இந்திய அரசியலமைப்பு 243 E-ன் படி, உள்ளாட்சி அமைப்புகள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே பதவியில் இருக்க முடியும். பதவிக்காலம் முடிவதற்கு முன் தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டும் அல்லது 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

எந்த காரணத்திற்காகவும் தேர்தலை நிறுத்தி வைக்காமல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய அரசியலமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. அதனால், சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சி தேர்தலையும் நடத்தினால் நிர்வாக ரீதியான எந்த பிரச்சனையும் ஏற்படாது.

இந்த நேரத்தில் தேர்தலை நடத்தினால், தேர்தல் செலவு மிச்சமாகும். மீண்டும் தேர்தலுக்காக அதிகாரிகளை தனியாக நியமிக்க வேண்டாம். மக்கள் நலப்பணிகளும் பாதிக்கப்படாது. நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்த ஏற்கனவே இந்திய அரசு ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்பதையும் வலியுறுத்தி வருகிறது. அதை செயல்படுத்தத் தமிழக அரசுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  அம்பத்தூரில் மளிகை கடைக்காரரையும் அவரது 8 மாத கர்ப்பிணியையும் கஞ்சா போதை கும்பல் கத்தியால் குத்தினர்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு பின் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது: பியூஸ் கோயல் ஆவேசம்
Next Article “தமிழகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து இன்றே அறிவிப்போம்” – பியூஷ் கோயல்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.