இந்தியாதொழில்நுட்பம்

101 எலக்ட்ரிக் கார்களை ஒரே நாளில் டெலிவரி செய்த TATA கார் நிறுவனம்!

101 எலக்ட்ரிக் கார்களை ஒரே நாளில் டெலிவரி செய்த TATA  கார் நிறுவனம்!

TATA  கார்  நிறுவனம் 101 எலக்ட்ரி கார்களை தங்களுது வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் டெலிவரி செய்து உள்ளனர். இதில் NEXON EV மற்றும் TIGOR EV கார்களும் அடங்கும். ஸ்ரீ லட்சுமி மோட்டார்ஸ் எண்டர்ப்ரைசஸ் இந்த சாதனையை செய்துள்ளது.

இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக  தமிழக போக்குவரத்ததுறை அமைச்சர்  திரு.S.S .சிவசங்கர் அவர்கள் கலந்துக்கொண்டு விழாவை தொடங்கிவைத்தார்.

எலக்ட்ரிக்  கார் உற்பத்தியில் NEXON EV மற்றும் TIGOR EV இந்த இரண்டு TATA EV  கார்களும் அதிகபச்சமாக  87 சதவித மார்க்கெட் ஷேர்களை பெற்றுள்ளது. FY2022ல், TIGOR EV அதன் 26KWH BATTERY பவர் கொண்டு அதிகபச்சமாக 74bhp மற்றும் 170Nm பீக் டார்க்  கொண்டுள்ளது. இந்த கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 306km செல்லும். GLOBAL NCAP நடத்தும் CRASH தேர்வில் இந்த கார்கள் நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது.

TATA NEXON EV எலக்ட்ரிக் கார் 2020ல் முதன்முறையாக வெளியானது. இதன் உள்ளம்சமாக 30.2 kWH BATTERY,  ELECTRIC SUV 127bhp மற்றும் 245Nm torque உள்ளது. இதன் சிங்கள்  சார்ஜ் 312km வரை செல்லலாம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இதை ஒட்டி வரும் ஆண்டுகளில் TATA NEXON EV கார் பேட்டரிகளை பெரிதாகவும் மற்றும் நீண்ட தொலைவு செல்லும் அளவுக்கு, TATA  நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த இரண்டு கார்களை தொடர்ந்து TATA  நிறுவனம்  தங்களுது  புதிய CURVV எலக்ட்ரிக் சவ் கான்செப்ட் கார்ரை பல நாடுகளில் வெளியிட்டுள்ளனர். இந்த கார், GEN 2 EV  ARCHITECTURE, இண்டெறியோர் LAYOUT கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த கார் 2024 ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்து உள்ளனர்.

வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்க முன்வந்து இருப்பதாகவும், அதன் மீது அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் எனவும் விழாவில் பேசிய ஜெனரல் மேனேஜர் ரமேஷ் துரைராஜன் கூறினார்.

Related posts