அரசியல்இந்தியா

வளர்ச்சிப் பணிகளில் குஜராத் முன்னிலை – திரவுபதி முர்மு!

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி உருவப் படத்திற்கு, திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

திரவுபதி முர்மு

நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குஜராத் மாநிலத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, வளர்ச்சிப் பணிகளில் குஜராத் எப்போதும் முன்னிலையில் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சி நடைமுறைகள் தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.

மேலும், குஜராத் மாநிலம் சுகாதாரத்துறையில் பெரும் சாதனைப் படைத்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதார அட்டை வழங்கிய முதல் மாநிலம் குஜராத் என்றும் கூறினார்.

Related posts