டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முககவச அபராதம்
கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மீறியவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.500 அபராதத்தை நீக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.