ஆன்மீகம்இந்தியா

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நிறைவு – 68,539 பக்தர்கள் தரிசனம்!

திருப்பதியில் இன்று மாலை பிரம்மோற்சவ விழா கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது.

விழா நிறைவு

கடந்த மாதம் 27-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த விழாவில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத காலை, மாலை என இரு வேளைகளிலும் மாட வீதிகளில் உலா வந்தது. மேலும், கடந்த 1-ம் தேதி கருட சேவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விழாவின் 8-வது நாளான நேற்று மாலை ஏழுமலையான் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். நேற்று 68,539 பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்தனர். 21,077 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

Related posts