திருப்பதியில் இந்தம் நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமான 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.
உண்டியல் வருமானம்
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அதிகளவிலான பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் திருப்பதியில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டுமே 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதனால் 140.7 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது. மேலும், கடந்த மாதம் 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். 1.7 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை ரூ.139.33 கோடி உண்டியல் வருமானமாக வந்துள்ளது.

