இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை நேற்று 7,946 ஆக இருந்தது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்
தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,168 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. 4 கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 930 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 4 கோடியே 38 லட்சத்து 55 ஆயிரத்து 365 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மொத்த பலி எண்ணிக்கை 5,27,932 ஆக உயர்ந்துள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

