சமூகம்தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது – சுகாதாரத் துறை !

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவது உண்மை தான் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று

2020ம் ஆண்டு இந்தியாவிற்குள் வந்த கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். உயிரிழப்புகள் அதிகமானதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பெரிதளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு போக முடியாத நிலை உருவானது.

Coronavirus (Covid-19)
தடுப்பூசி
பள்ளிகள் திறப்பு

இதனையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொற்று பரவல் குறைய தொடங்கியது. பள்ளிகளிலும் தேர்வுகள் நடைபெற்று முடிந்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 பேருக்கு தொற்று

கடந்த வாரம் தி.நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அந்த 6 பேரும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

தொற்று அதிகரிப்பு

தமிழகத்தில் நேற்று மட்டுமே 144 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தொற்றின் எண்ணிக்கை 90 ஆக இருந்த நிலையில் ஓரே நாளில் கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மட்டும் சுமார் 82 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன் பேச்சு

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது உண்மைதான். 2 ஆயிரத்துக்கும் கீழ் இருந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

தடுப்பூசி

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 245 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் மேலானவர்கள் உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசியை கொள்ளவில்லை. அதின் விளைவாகதான் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts