சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவித்துள்ளது.
நீதிமன்ற வழக்கு
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் யானை திரைப்படத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் யானை படத்தில் மீனவர்களை கூலிப்படையினராக சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத உணர்வை புண்படுத்துவது போன்ற காட்சிகளும் படத்தில் இடம் பெறுகிறது. இதனால் யானை படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி மூலமாக ஆஜராவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டனர்.

