Editor's Picksபயணம்

37 ஆயிரம் அடி உயரத்தில் தூங்கிய விமானி : அச்சத்தில் பயணிகள் !

தூங்கிய விமானி

கடந்த 15-ம் தேதி சூடானில் இருந்து எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று சென்றது. 2 விமானிகள் இந்த விமானத்தை இயக்கிய இந்த விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அபாபா சர்வதேச விமான நிலையத்தை விமானம் நெருங்கும் போது விமானத்தை தரையிறக்க கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் விமானிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

எச்சரிக்கை மணி

பின்னர் விமானத்தை தானியங்கி கருவிகள் மூலம் இயக்கிவிட்டு, விமானிகள் அறையில் தூங்கி கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானம் எச்சரிக்கை மணி அடிக்க தொடங்கினர். அலாரத்தின் தொடர் சத்தத்தால் விமானிகள் விழித்து கொண்டனர். இதனையடுத்து 25 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் தரையிறங்கியது.

Related posts