Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»முதன்முறையாக இரவு நேர விமான சேவை: தூத்துக்குடி விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

முதன்முறையாக இரவு நேர விமான சேவை: தூத்துக்குடி விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

March 30, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து முதன்முறையாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தூத்துக்குடியில், சுமார் ரூ. 452 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த விமான நிலையம் 2044 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்படத்தக்க வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 1,350 மீட்டர் அளவில் மட்டுமே விமான ஓடுதளம் இருந்த நிலையில் தற்போது, 3,115 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், இரவு நேரத்தில் விமானங்கள் வந்து செல்லக்கூடிய வகையிலும் விமான நிலையம் விரிவாக்கப்பட்டுள்ளது

இதுதவிர, பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன. இதனால் மிகப்பெரிய ஏ – 321 ரக ஏர்பஸ் விமானங்கள் கூட தூத்துக்குடிக்கு வந்து செல்ல முடியும். மேலும், விரைவில் இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, கொச்சி, கொழும்பு, மலேசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்களை இயக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, சர்வதேச அளவில் தூத்துக்குடி முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க :  இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை

தனியார் விமான சேவைகள் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தினமும் சென்னைக்கு 4 விமான சேவைகள், பெங்களூருக்கு ஒரு விமான சேவை என 5 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், இங்கு இரவு நேர விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று (மார்ச் 29) முதல் இரவு நேர விமான சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்கு புறப்பட்ட விமானம், இரவு 7:55 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைந்தது.

இதையும் படிக்க :  “தமிழக இடைக்கால பட்ஜெட்... மேனா மினுக்கி உரை!” - பழனிசாமி விமர்சனம்

இங்கு இரவு நேர விமான சேவையில் முதன்முறையாக பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளை, விமான நிலைய ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, பயணிகளுடன் சேர்ந்து விமான நிலைய இயக்குநர் தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நேற்று இரவு நேர விமான சேவை முதன்முறையாக துவங்கப்பட்ட நிலையில், விமானம் முழுவதும் டிக்கெட் புக்கிங் நிறைவடைந்து, சென்னை – தூத்துக்குடி புறப்பாடு மற்றும் வருகை விமானங்களில் தலா 78 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை துவங்கப்பட்டிருப்பது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை
Next Article வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சசிகலா; விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.