குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
அருவிகளில் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவியில் சீசன் தொடங்கி சாரல் மழை பெய்து வருகிறது. இங்குள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த மழையால் பிரதான அருவியான குற்றால அருவில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்து வருகின்றது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

