சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஆண்டு இறுதியில் முதலமைச்சரால் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அரசாணை
தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகத்தின் மீது பொறுப்புடன் பாராட்டத்தக்க வகையில் சமுதாய மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கத் தமிழக அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன்படி, விவசாயம், கால்நடை, கல்வி, குடிநீர், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் முதலமைச்சரால் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாவட்டத்திற்கு ஒரு தொழில் நிறுவனம் என மொத்தமாக 37 மாவட்டங்களில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

