எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொன்னையன் மீது கோபமாக உள்ளனர் இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஒபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பொன்னையன் ஆடியோ
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் சர்ச்சையாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அந்த ஆடியோ நான் பேசியதே இல்லை. தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொய்யான ஆடியோ என்று பொன்னையன் விளக்கம் அளித்தார். மேலும், இந்த ஆடியோவை வெளியிட்டவர்களை தான் இதைப்பற்றி கேட்கவேண்டும் என்று கூறினார்.
உயிருக்கு ஆபத்து
இந்நிலையில், ஒபிஎஸ் ஆதரவளரான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பொன்னையன் அதிமுகவில் மிகவும் மூத்தவர். தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் வருவதால் பொன்னையன் மாற்றிப்பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொன்னையன் மீது கோபமாக உள்ளனர் இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காவலர்கள் பொன்னையன் வீட்டுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்’ என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

