முக்கிய பிரமுகர்களின் சந்திப்பின்போதும் மற்றும் விழாக்களில் கலந்துகொள்ளும் போதும் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.
பரிசு பொருட்கள்
அந்தவகையில் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள 1,200 பரிசு பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும், ஏலத்தில் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை மக்கள் நல திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் அன்று தொடங்கப்பட்ட இந்த ஏலம் நேற்றுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில், ஏலம் வரும் 12-ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.