நடிகர் விக்ரம்
கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் முதல் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், கார்த்தி, ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்றவர்களின் நடிப்பை பெரிதும் பாராட்டினர். குறிப்பாக ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரம் மிக சரியான தேர்வு என பாராட்டினர்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் நன்றி, தேங்க்ஸ், சுக்ரியா, நன்னி, தன்யவாத் என்று ஐந்து மொழிகளில் ரசிகர்கள் நன்றி கூறியுள்ளார்.
அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி. #PonniyanSelvan #ManiRatnam @LycaProductions @arrahman @actor_jayamravi @Karthi_Offl @trishtrashers #AishwaryaRaiBachchan pic.twitter.com/YxJczs44gh
— Aditha Karikalan (@chiyaan) October 1, 2022