கனியாமூர் பள்ளியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமினில் விடிவிப்பு
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ம் தேதி 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பது தொடர்பாக எழுந்த சந்தேகத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு இறுதியில் போராட்டம் கலவரமாக முடிவுபெற்றது. நடந்த கலவரத்தில் பள்ளி சார்ந்த பொருள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பெயரில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இந்த கலவரம் தொடர்பாக காவல்துறையினர் வீடியோ ஆதாரத்தை வைத்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செயத்தனர். இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட கிளை நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. கலவர வழக்கில் 300க்கும் பிற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 50 நபர்களின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 72 நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 174 நபரின் ஜாமின் மனுக்கள் மீது நாளை விசாரணை செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

