அதிமுகவின் முன்னாள் எம்.பி. மாயத்தேவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
முன்னாள் எம்.பி.
1935ம் ஆண்டு உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்தவர் மாயத்தேவர். 1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். அதனையடுத்து தொடர்ந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மாயத்தேவர். பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து அப்போதும் திமுக சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனையடுத்து கடந்த 15 ஆண்டுகளாக அரசியலை விட்டு விலகி இருந்த மாயத்தேவர் இன்று மதியம் 12.30 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். நாளை அவரது அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

