அரசியல்இந்தியா

பஞ்சாபை தொடர்ந்து கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அங்கீகாரம் !

பஞ்சாபை தொடர்ந்து கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம்

ஆம் ஆத்மி கட்சியை தேசிய அளவில் அனைவருக்கும் தெரிவித்திருந்தாலும் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை. காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 2 வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. இந்த வரிசையில், கோவாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இதனால் கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லி, பஞ்சாப்பை, தொடர்ந்து கோவாவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சி மாறியுள்ளது. இதேபோல், இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற நிலை எட்டினால் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை ஆம் ஆத்மி கட்சி அடையும் என கூறப்படுகிறது.

Related posts