சென்னை கடற்கரை பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பறிமுதல்
சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்றும் வகையில் கடந்த 5ம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 8ம் தேதி வரை 4 நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 1391 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 61 கடைகளில் இருந்து 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த கடைகளுக்கு உரிமையாளர்களுக்கு ரூ.15,700 அபராதம் விதிக்கப்பட்டது.

