நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.
தூய்மை நகரம்
நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்களை கவுரவப்படுத்தும் நோக்கில் ‘ஸ்வஸ் சர்வேக்ஷான்’ என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 2016-ம் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையான நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
முதலிடம்
அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. தூய்மை நகரங்களின் பட்டியலில் கடந்த 5 முறையாக இந்தூர் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

