பொன்னியின் செல்வன்
கல்கியின் புகழ் பெற்ற நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
துல்கர் சல்மான்
இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் பல நண்பர்கள் ஒரு குடும்பமாக இணைந்து நடித்துள்ளனர். இதை எனது தனிப்பட்ட வெற்றியைப் போல் உணர்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Hearing the most amazing things about #PonniyinSelvan1 #PS1 ! With so many friends like family in the film it feels like a personal victory ! Take a bow team ! @MadrasTalkies_ #ManiSir @arrahman pic.twitter.com/b9rWBW7NwS
— Dulquer Salmaan (@dulQuer) September 30, 2022

