சமூகம்தமிழ்நாடு

இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள சிகரெட்கள் பறிமுதல்!

விமான நிலைம் 

கடந்த 29-ந்தேதி சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது துபாயிலிருந்து வந்த அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 சிகரெட் பெட்டிகள் மற்றும் 260 கிராம் எடைகொண்ட தங்கமும் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் ரூ.11.47 லட்சம் மதிப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை 

மற்றொரு நபரிடமிருந்து தங்க தூள், தங்கச் சங்கிலி மற்றும் ஒரு தங்க நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மதிப்பு ரூ.9.84 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts