திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 11ம் வகுப்பு மாணவன் சதீஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருநெல்வேலியை அடுத்த முன்னீர்பள்ளத்தை சேர்ந்த மாணவன் சதிஷ். இவர் வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இதனை தொடர்ந்து மாணவன் செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து செய்தியறிந்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தற்கொலை செய்து கொண்ட மாணவன் சதிஷ் உடலை மீட்டு பேராத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வேறு ஏதேனும் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது. பெற்றோர் கடித்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

