கால்நடைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
வட்டியில்லா கடன்
இன்று தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கடந்த ஆண்டு 407 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு 1764 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் வட்டியில்லா கடன் போன்று , கால்நடைகளை மேய்ப்பதற்கு நிலம் இல்லாதவர்களும் தங்களது கால்நடைகளை வளர்ப்பதற்கு தீவனம் வாங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்தா ண்டு 263 கோடி ரூபாய் தற்போது வரை கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் வழங்கப்படும் கடன்கள் அனைத்தும் ஒழுங்குமுறைப்படுத்தி வழங்கப்படுகிறது. வருடம் ஒரு முறை ஆடிட்டிங் செய்யப்படுகிறது’ என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

