அரசியல்தமிழ்நாடு

பூர்வகுடி மக்களின் வீட்டை அகற்றுவதை தமிழக அரசு உடனே நிறுத்தவேண்டும் – சீமான் வேண்டுகோள் !

சென்னை, மறைமலைநகரில் பூர்வகுடி மக்களின் வீட்டை அகற்றும் தமிழக அரசின் கொடுங்கோல் போக்கை நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பூர்வகுடி மக்கள்

சமீபகாலமாக சென்னை வாழ் பூர்வகுடி மக்களை செமஞ்சேரி, கண்ணகி நகர், கல்லுக்கூட்டம் ஆகிய நகரங்களுக்கு தமிழக அரசு இடம் மாற்றம்  செய்து வருகிறது. இதனை திமுக, அதிமுக இருகட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது செய்கின்றனர்.

இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாகி வருகிறது. மக்கள் மனதளவிலும், பொருளாதாரத்திலும், குழந்தைகள் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் கூட ஆர்.எ. புரத்தில் 259 பூர்வகுடி மக்களின் வீட்டை அகற்றும் செய்யும் போது முதியவர் ஒருவர் தீக்குளித்து இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறைமலைநகர் மக்கள்

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ராஜீவ்காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ளது. அங்கு சுமார் 450 குடும்பங்கள் 60-வது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது ஒரு தனியார் அமைப்பு தொடர்ந்த வழக்கில் புறம்போக்கு நிலத்தில் மக்கள் வீடு கட்டிருப்பதாகவும் வீடுகளை அகற்றம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வீட்டை மக்கள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள் . இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி சீமான்

இதையடுத்து மறைமலைநகரில் உள்ள மக்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். அப்போது மக்கள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தாங்கள் குறைகளை கேட்க யாரும் முன்வருவதில்லை என கூறினார்கள்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘மக்கள் 60வது ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருவதாகவும் அரசு தான் சாலை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு எரிபொருள் இணைப்பு என அனைத்தையும் செய்து கொடுத்தது. அப்போது தெரியவில்லையா இது ஆக்கிரமிப்பு நிலம் என்று மக்களை வாழவைக்கத்தான் அரசு என்று உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து பூர்வகுடி மக்களை சென்னை நகரை விட்டு அகற்றுவது அநீதி செயல். தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரத்தில் தலையீட்டு மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்’ என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts