சினிமாவெள்ளித்திரை

மீண்டும் தொடங்கும் இந்தியன்-2 : அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன்-2

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கினர்.ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். நடிகர் கமல் ஹாசன் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்நிலையில், விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன்-2 படத்தை மீண்டும் தொடங்க போவதாக கூறப்பட்டது. படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தகவல்கள் வெளியானது.

அதன்பெயரில், இந்தியன்-2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அவர் திரும்ப வந்துவிட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts