இந்தியாசினிமா

‘லவ் டுடே’ பட ஹிந்தி ரீமேக் – போனி கபூர் விளக்கம்!

ஹிந்தி ரீமேக்

2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனையடுத்து அவர் இயக்கி, நடித்திருந்த ‘லவ் டுடே’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வெறும் ரூ.4 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.70 கோடி வரை வசூல் செய்தது. மேலும், இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனிடையே ‘லவ் டுடே’ படத்தை ஹிந்தி மொழியில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

விளக்கம்

இந்நிலையில், இது தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘லவ் டுடே’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. இது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts