இந்தியாசினிமா

பிரபல இயக்குனருடன் இணைந்த ரன்பீர் கபூர்!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து இதன் ஹிந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ திரைப்படமும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ‘அனிமல்’. இதில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்க, கதையாகியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘அனிமல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Related posts