சினிமாவெள்ளித்திரை

சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ஃபர்ஸ்ட் சிங்கிள்

டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் திரைப்படம் ‘பிரின்ஸ்’. கதாநாயகியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ரியா போஷாப்கா நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related posts