அரசியல்இந்தியாதமிழ்நாடு

டெல்லியில் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கும் ஜி.கே.வாசன் !

காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தை விரைவில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன் 

இதுகுறித்து செய்தியாளர்கள் ஜி.கே.வாசனிடம் கேள்வியெழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். எனது நெருங்கிய நண்பர். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் அவருடன் தொலைபேசியில் பேசினேன். வரும் நாட்களில் நான் டெல்லி செல்ல உள்ளேன். அங்கு குலாம் நபி ஆசாத்தை நேரில் சந்தித்து பேச உள்ளேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 9 ஆண்டுகளை கடந்து விட்டது. இருப்பினும் கட்சியில் இருந்து வெளியேறும் போதும் சரி, இப்போதும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காதது நான் ஒருவன் மட்டுமே’ என கூறியுள்ளார்.

Related posts