சினிமாவெள்ளித்திரை

‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு !

இசை வெளியீட்டு விழா

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கியுள்ள இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கிள் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related posts