அரசியல்உலகம்பயணம்

ரஷியாவுடன் இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது கவலையளிக்கிறது – அமெரிக்கா அதிபர் !

ரஷியா பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடத்த உள்ளது.

கூட்டு ராணுவ பயிற்சி

ரஷியா தலைமையில் ‘வொஸ்டோக் 2022’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது. நாளை முதல் வரும் 7ம் தேதி வரை இந்த பயற்சி நடைபெறும். ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, சீனா, தஜிகிஸ்தான்,  அசர்பைஜான், பெலாரஸ் உள்பட பல நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், அமெரிக்க வெள்ளைமாளிகை அதிபர் ஜோ பைடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷியாவுடன் இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பைடன், ‘உக்ரைன் மீது தூண்டுதலற்ற போரை ரஷியா நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஷியாவுடன் இந்தியா உள்பட பல நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது கவலையளிக்கிறது’ என பதிலளித்துள்ளார்.

Related posts