சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

சென்னையில் ஜாமீனில் வெளியே வந்த 2 நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை !

சென்னை அருகே ஜாமீனில் வெளியே வந்த இரண்டு நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

வெட்டிக் கொலை

தாம்பரம், அருகே உள்ள மணிமங்கலத்தை சேர்ந்தவர்கள் சுரேந்தர் மற்றும் விக்னேஷ். இந்த இரண்டு நபர்களும் பல்வேறு குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள். சமீபத்தில் பல வழக்கில் சிறையிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், காவல்நிலையம் அருகே சுரேந்தர் மற்றும் விக்னேஷ் ஆகியோரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பேரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts