காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரிய கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் காணொளிக்காட்சி மூலமாக பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.