இந்தியாசினிமாவணிகம்

பிரபல ஹிந்தி நடிகருக்கு இரண்டாவது முறையாக கொரோனா உறுதி !

நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சிலர் இரண்டாவது முறையாக கொரோனா பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் கொரோனா தொற்று இரண்டாவது முறையாக ஏற்பட்டது. இந்நிலையில், ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஹிந்தி நடிகர்

79 வயதான இவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தனக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts