சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

காட்டெருமையை வேட்டையாடி கறியை பதப்படுத்திய நபர்கள் – வழக்குப்பதிவு செய்து பறிமுதல் !

செங்கம் அருகே காட்டெருமையை வேட்டையாடி கறியை வீட்டில் பதப்படுத்தி வைத்திருந்ததை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

காட்டெருமை காறி 

திருவண்ணாமலை, செங்கம் அருகே உள்ள வலசை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ராயர் மற்றும் ஜெயபாலன். இந்த இரண்டு நபர்களும் வலசை மலைப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டு எருமையை வேட்டையாடி சுமார் 15 கிலோ கறியை அவர்களது வீட்டில் பதப்படுத்தி வைத்திருப்பதாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. வனத்துறை அதிகாரி ராமநாதன் தலைமையில் இந்திரா நகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வனத்துறையினர் அதிரடியாக சென்ற சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் காட்டெருமை கறியை, பதப்படுத்தி வைத்திருப்பதை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts