சினிமாதமிழ்நாடுவெள்ளித்திரை

திரையரங்கு டிக்கெட் முன்பதிவு முறையை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் – தனஞ்செயன் கோரிக்கை !

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டால் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்பதிவு செய்யும் முறை

இந்தியாவில் திரைப்பட டிக்கெட்களை Book My Show, Ticket New போன்ற இணைதளங்கள் மூலம் முன்பதிவு செய்து வருகிறோம். இதற்காக ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ஒரு டிக்கெட்டிற்கு 35 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இது மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயல் என்று பலரும் கண்டித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் மூலமாக மட்டுமே இந்த நிறுவனங்களுக்கு சுமார் 130 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

PVR

முறைக்கேடு

மேலும், திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் தொகைகள் முழுமையாக கணக்கு காட்டப்படும் முறையும் இங்கு இல்லை. ஒரு திரையரங்கில் பத்து லட்ச ரூபாய் ஒரு திரைப்படம் வசூல் செய்துள்ளது என்றால், அதற்கு வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கான கணக்கை தான் LBET என்று சொல்லப்படும் மாநில வரிக்கு கணக்கு காட்டப்படுகிறது.

ஆந்திராவை பின்பற்ற வேண்டும்

ஆனால் தயாரிப்பாளர்களிடம் இருந்து பத்து லட்சத்திற்கான வரியும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த கணக்கை முழுமையாக அரசுக்கு காட்டப்படுவதில்லை. தமிழக அரசு இதை தடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், அதை தடுக்க ஆந்திர மாநிலத்தில் பின்பற்றப்படும் திட்டத்தை இங்கு நடைமுறை படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Ticket Booking App

அரசு இணைதளம்

ஆந்திராவில் திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசு இணைதளம் மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்று ஆந்திர மாநில அரசு அறிவித்திருந்தது. அதற்காக 2% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த முறை இன்னும் அங்கு முழுமையாக அமலுக்கு வரவில்லை.

தனஞ்செயன் கோரிக்கை

இதுபோன்று தமிழகத்திலும் திரையரங்குகளில் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டால், அரசுக்கு வரும் வரி வருவாய் அதிகரிக்கும். ஆனால் இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் கணினிமயமாக்கப்பட வேண்டும் என்று தனஞ்செயன் தெரிவித்திருக்கிறார்.

Related posts