கூல் சுரேஷ் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு புரொமோஷன் செய்துள்ளார் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
சிம்பு படம்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’ இப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க, நடிகை சித்தி இத்தானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
கூல் சுரேஷுக்கு நன்றி
இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படம் குறித்து சமூக வலைதளத்தில் பேசிய நடிகர் சிம்பு கூல் ‘ரசிகர்கள் அனைவரும் கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும். அவர் படத்திற்கு புரொமோஷன் தான் செய்துள்ளார். நன்றி கூல் சுரேஷ்’ இவ்வாறு கூறினார்.