தமிழ்நாடுமருத்துவம்

ப்ளூ காய்ச்சலுக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

ப்ளூ வைரஸ் காற்றின் மூலம் மற்றவர்களை பாதிக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

ப்ளூ காய்ச்சல்

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்குவதால் சாதாரண காய்ச்சல் மற்றும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ப்ளூ காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேட்டி 

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ப்ளூ காய்ச்சல் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 282 குழந்தைகள் மட்டுமே ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளை விட இந்தாண்டு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு குறைவு தான். எனவே ப்ளூ காய்ச்சலுக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை’ இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts