அரசியல்சினிமாதமிழ்நாடு

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை திரிஷா விளக்கம் !

நடிகை திரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று வெளியான செய்தி குறித்து அவர் தற்போது விளக்களித்துள்ளார்.

நடிகை திரிஷா

‘வர்ஷம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், 2002-ம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் நடிகை திரிஷா விரைவில் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

விளக்கம்

இது தொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நடிகை திரிஷா விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘நான் அரசியலுக்கு வர இருப்பதாக வெளியான தகவல் துளியும் உண்மை இல்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Related posts