சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் வைரலாகும் விக்ரம் வேதா ஹிந்தி டீசர் !

ஹிந்தி டீசர்

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோர் நடித்து கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சஷிகாந்த் தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து புஷ்கர்-காயத்ரி விக்ரம் வேதா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தனர். ஹிந்தியில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட விக்ரம் வேதா ஹிந்தி படத்தின் டீசர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Related posts