கல்விசமூகம்தமிழ்நாடுவெள்ளித்திரை

தனது ரசிகரின் மனைவியின் படிப்பு செலவை ஏற்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த நடிகர் !

நடிகர் சூர்யா தனது ரசிகரின் மனைவியின் படிப்பு செலவை ஏற்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார்.

அகரம் சூர்யா

நடிகர் சூர்யா, நடிப்பது மட்டுமல்லாமல் ‘அகரம்’ என்ற அறக்கட்டளை நிறுவி பல ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவுக்கு உதவி வருகிறார். இதன் மூலம் படித்த பலர் மருத்துவராகவும், பொறியாளராகவும் முக்கிய இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சூர்யா ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மனோஜின் மனைவி தீபிகா தனது மேற்படிப்பிற்காக ‘அகரம்’ அறக்கட்டளையின் மூலம் அயர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சூர்யா தொலைபேசி வாயிலாக தீபிகாவிற்கு வாழ்த்தினர். அப்போது அவர் கூறுகையில், ‘படிப்பு முக்கியம். அதே நேரம் குடும்ப சந்தோஷமும் முக்கியம். உங்கள் மனது சொல்வதை எப்போதும் கேளுங்கள்’ என அறிவுரை கூறி வாழ்த்தியுள்ளார்.

Related posts