சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் கவனம் ஈர்க்கும் வைபவ் பட டிரைலர்!

டிரைலர்

அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பபூன்’ கோவா, மங்காத்தா, ஈசன், மேயாதமான் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வைபவ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘நட்பே துணை’ படத்தில் நடித்த அனகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘பபூன்’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Related posts