சினிமா

அதிக அளவில் ரீமேக் செய்யப்படும் தமிழ் படங்கள்!

துப்பாக்கி, கஜினி, மௌனகுரு  படங்களையடுத்து பிற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்படும் தமிழ்  படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ரீமேக் படங்கள்

ஏற்கனவே ஏ. ஆர் முருகதாஸ் இயக்கதில் துப்பாக்கி, கஜினி போன்ற படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யபட்ட நிலையில், மௌனகுரு என்ற தமிழ் படத்தையும்  ஹிந்தில் ரீமேக் செய்திருந்தார்  ஏ . அர் முருகதாஸ்.
இதனையடுத்து சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று, விக்ரம் வேதா, மாநகரம் , போன்ற தமிழ் படங்களும் ஹிந்தியில் ரீமேக் செய்யபடுகிறது.

ரீமேக் படங்களின் பட்டியல்:

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி கடந்த 2020 ஆம் ஆண்டு ஓ.டி.டி யில் வெளி வந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதையடுத்து, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் , கைதி, போன்ற படங்களும், ஷங்கர் இயக்கிய அந்தியன் படமும் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் மாநகரம், சூரரைப் போற்று படங்களின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது குறிப்பிடதக்கது.

ரீமேக் படத்தில் தமிழ் நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் மாநகரம். இது ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்ற நிலையில், அதை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மும்பைக்கர் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். இதில் பிரபல தமிழ் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முனிஷ் காந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Related posts