ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் குறித்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
ஜிகர்தண்டா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தப் படத்துக்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானார்.
இந்நிலையில், தற்போது ஜிகர்தண்டா படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
And….. pic.twitter.com/pKL2Qi4oks
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022

