தீரன் சின்னமலையின் நினைவுநாளில் முன்னிட்டு புகழ்வணக்கம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நினைவு நாள்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவில் அவர், ‘தாயகத்தின் மானத்துக்கு இழுக்கு நேர்ந்தபோது, தன்னுரிமை மிதித்துத் துவைக்கப்படும்போது, “சின்னமலை வரிதரமாட்டான் !ஆங்கிலேயருக்கு அடிபணிய மாட்டான்!” என முழங்கி, உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலை வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!” என பதிவிட்டுள்ளார்.
தாயகத்தின் மானத்துக்கு இழுக்கு நேர்ந்தபோது, தன்னுரிமை மிதித்துத் துவைக்கப்படும்போது,
“சின்னமலை வரிதரமாட்டான்!ஆங்கிலேயருக்கு அடிபணிய மாட்டான்!” என முழங்கி, உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்! pic.twitter.com/1iglKHACJp— M.K.Stalin (@mkstalin) August 3, 2022

