தமிழகத்தில் தொடர்ந்து பருத்தியின் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விலை உயர்வு
நாமக்கலில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கல், சேந்தமங்கலம், துறையூர், கொளக்குடி, முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் விற்பனையில் கலந்துகொண்டனர்.
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் பருத்திக்கு குவிண்டாலுக்கு 8,699 ரூபாய் முதல் 10,899 ரூபாய் வரையிலும், சுரபி ரகம் பருத்திக்கு குவிண்டாலுக்கு 10,050 ரூபாய் முதல் 11,399 ரூபாய் வரையிலும், கொட்டு ரகம் பருத்திக்கு குவிண்டால் 3,699 ரூபாய் முதல் 8,699 ரூபாய் வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. கடந்த வரத்தை விட இந்த வரம் விலை அதிகரித்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. மேலும், இந்த ஆண்டு விளைச்சல் குறைந்து போனாலும் நல்ல விலை கிடைத்துள்ளதாக கூறினார்.