இந்தியா

நீதிமன்றங்களிலும், தொழில்நுட்பக் கல்வியிலும் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு!

நீதிமன்றங்களிலும், தொழில்நுட்பக் கல்வியிலும் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு.

புது தில்லி:  விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித்,மத்திய அமைச்சர்கள் திரு.கிரண் ரிஜிஜு, பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘நம் நாட்டில் நீதித்துறை அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருந்தாலும், சட்டமன்றம் குடிமக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.

அரசியலமைப்பின் இந்த இரண்டு பிரிவுகளின் இந்த சங்கமமும் சமநிலையும் நாட்டில் பயனுள்ள மற்றும் காலவரையறையான நீதித்துறை அமைப்புக்கான பாதை வரைபடத்தைத் தயாரிக்கும் என்று நான் நம்புகிறேன்.

சுதந்திரத்தின் 75வது வருடம் நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகிய இரண்டின் பங்குகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து தெளிவுபடுத்தியுள்ளன என்றார். தேவையான இடங்களில், இந்த உறவு நாட்டிற்கு வழிகாட்டும் வகையில் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது.

இந்த மாநாடு அரசியல் சாசனத்தின் அழகின் துடிப்பான வெளிப்பாடு. மிக நீண்ட காலமாக முதல் முதலமைச்சராகவும், இப்போது பிரதமராகவும் மாநாட்டுக்கு வருவதாக கூறினார்.‘ஒருவகையில் இந்த மாநாட்டைப் பொறுத்தவரை நான் மிகவும் மூத்தவன்’ என்று கூறினார்.

2047 ஆம் ஆண்டின் இந்தியாவின் இலக்கை நிறைவேற்றும் வகையில் நமது நீதித்துறையை எவ்வாறு திறமையாக மாற்றுவது,எளிதான நீதி, விரைவான நீதி மற்றும் அனைவருக்கும் நீதி கிடைக்கக்கூடிய ஒரு நீதித்துறை அமைப்பாக இருக்க வேண்டும்”

நீதி வழங்குவதில் தாமதத்தை குறைக்க அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும், நீதித்துறை பலத்தை அதிகரிக்கவும், நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

வழக்கு மேலாண்மைக்காக ICT பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீதித்துறையின் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

நீதித்துறை பணியின் பின்னணி நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா பணியின் இன்றியமையாத பகுதியாக நீதித்துறையும் இருக்கும். நீதி துறையில் எந்த விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதென இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதை முன்னெடுத்துச் செல்லுமாறு முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இ-கோர்ட்டுகள் திட்டம் நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம் என்பதையும் இதன் மூலம் மக்களின் உரிமைகள் நீதித்துறையில் வலுப்பெறும் என்றார்.
தொழில்நுட்பக் கல்வியிலும் உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

சட்டங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் காலாவதியான தன்மை குறித்தும் பிரதமர் பேசினார். 2015 ஆம் ஆண்டில் 1800 சட்டங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts