கல்விசமூகம்தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியது உத்தரவு !

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். மாணவியின் இறப்புக்கு நீதி வேண்டி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் அடிப்படையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Related posts